உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராமங்கள் தோறும் கோயில்கள் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரர் அறிவுரை

கிராமங்கள் தோறும் கோயில்கள் காஞ்சி ஸ்ரீ விஜயேந்திரர் அறிவுரை

மதுரை : காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் ஸ்ரீ கிருஷ்ண விஜய துர்கா மகா சபா திருப்பதியில் நடந்தது. வேதங்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற 200 மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசியதாவது:கோயில் இருக்கும் இடங்களில் தர்மம் தானாகவே பரவுகிறது. தர்மத்தை பாதுகாப்பதே தேசத்தை பாதுகாப்பது ஆகும். உடல் வலிமையாக இருக்க தியானமும் உபவாசம் தேவை. அதேபோல் நாடு நலமாக இருக்க ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு கோயிலாவது இருக்க வேண்டும். விவசாயம், பசு வளர்ப்பு, இயற்கையை அனைவரும் இணைந்து பாதுகாக்க வேண்டும்.ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து துளசி செடிகளையாவது நடவு செய்து சூழலை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் வெங்கடேஸ்வர வேத பல்கலை துணை வேந்தர் ராணி சதாசிவ மூர்த்தி, அல்லாடி மோகன், திருப்பதி பிராமணர் சங்க நிர்வாகிகள் பீமாஸ் பாலாஜி, அஜய்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.வெங்கடேஸ்வர கனபாடிகள், சூரிய நாராயண கனபாடிகள், வெங்கடப்ப யக்ய நாராயணர் மாணவர்களை தேர்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ