உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாயில் கழிவு நீர்: உயர்நீதிமன்றம் தடை

கண்மாயில் கழிவு நீர்: உயர்நீதிமன்றம் தடை

மதுரை: மதுரை ஒத்தக்கடை சாந்தமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:யானைமலை அருகே கொடிக்குளத்தில் வவ்வால்தோட்டம் கண்மாய் உள்ளது. இங்கு குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலக்கிறது. தற்போது கொடிக்குளம், ஒத்தக்கடை, நரசிங்கம் ஊராட்சிகள் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு உறிஞ்சு குழி அமைக்கப்படுகிறது. இதனால் கண்மாய் மேலும் மாசுபடும். கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, கழிவு நீர் கலப்பதை தடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: கழிவு நீர் சுத்திகரிப்பு குழி அமைக்க தடை விதிக்கப்படுகிறது. கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை