கே.ஆர்.எஸ்., பள்ளி மாணவர் சாதனை
மதுரை: மதுரை சகோதயா ஸ்கூல்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பில் 6வது மண்டல சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களுக்கு இடையேயான வில் வித்தை போட்டிகள் ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி 7ம் வகுப்பு மாணவர் மாணிக்கவாசகம் (ரெக்கர்வ் பவ்) முதல் பரிசு வென்றார். அவரை முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.