உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் கும்பாபிஷேக ஆலோசனை

குன்றத்து கோயிலில் கும்பாபிஷேக ஆலோசனை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் மணிச் செல்வம்,ராமையா, கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் சுவாமிநாதன், ரமேஷ், சொக்கு சுப்பிரமணியம்,சண்முகசுந்தரம் பங்கேற்றனர். சத்யபிரியா கூறியதாவது: கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் கோயிலுக்கு கும்பாபிஷேக திருப்பணிகள், உப கோயில்கள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அதற்கான நிர்வாக அனுமதி பெறுவது சம்பந்தமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலாஜி நகரில் ரூ. 4.50 கோடியில் கட்டப்படும் சஷ்டி மண்டபம், ரூ. 6.50 கோடியில் லட்சுமி தீர்த்த குளம் சீரமைப்பு பணிகள், ரூ. 49.50 லட்சத்தில் கட்டப்படும் யானை அவ்வை நினைவு மண்டப பணிகள் குறித்தும், அப்பணிகளை விரைவில் முடிக்கவும், சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள்கும்பாபிஷேகத்திற்கு பாலாலயம் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ