உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயில் மூலஸ்தானத்தில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

குன்றத்து கோயில் மூலஸ்தானத்தில் கும்பாபிஷேக பணிகள் துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கின.பாலாலயம் பிப். 10ல் நடந்தது. கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானங்களில் பணி நிறைவடைந்துள்ளன. மண்டபங்கள், துாண்களில் 'வாட்டர் வாஷ்' முடிந்து, மேல் பகுதி கமலங்கள் வரையப்பட்டு வருகிறது. ராஜ கோபுரத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து வர்ணங்கள் தீட்டப்படுகின்றன.ஏப்.,9ல் மூலவர்கள் சுப்பிரமணியர், கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு பாலாலயம் நடந்தது. மூலஸ்தான மண்டபத்தில் சீரமைப்பு பணி துவங்கின. மூலவர் பாதங்களில் மருந்து சாத்துப்படி செய்யப்பட்டு பணி துவக்கப்பட்டது.அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், ராமையா, அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் மாரியப்பன், கோயில் துணை கமிஷனர் சூரியநாராயணன், உதவி கமிஷனர் வளர்மதி, திருப்பரங்குன்றம் ஆய்வர் இளவரசி, தெற்கு ஆய்வர் மதுசூதனன் ராயர் பங்கேற்றனர். ஜூலை 14ல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை