உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டியில் காளியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மே 26 ல், கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. நேற்று காலை யாக பூஜைகள் முடிந்த பிறகு, புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடாகி கோபுர கும்பத்திற்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். காளியம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. தொட்டப்பநாயக்கனுார் பாண்டியன், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை