மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை
02-Apr-2026
மதுரை: தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களில் ஏப். 23 ம் தேதியும், மேற்கு வங்கத்தில் 2ம் கட்டமாக ஏப்.29 ம் தேதியும் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு நடப்பதை உறுதி செய்யும் வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், பி.பி.ஓ., உள்ளடக்கிய வணிகநிறுவனங்கள், இதர தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ்நாடு, மேற்கு வங்க தொழிலாளர்கள், தற்காலிக, தினக்கூலி, ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும். விடுப்பு வழங்காவிடில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான புகார்களை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (94453 98761), துணை ஆய்வர்(98658 18636), உதவி ஆய்வர் (94863 65149), உதவி ஆணையர் (94885 47624) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
02-Apr-2026