உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் படியளந்தால் நிலமளக்கும் சர்வேயர்கள்

பேரையூரில் படியளந்தால் நிலமளக்கும் சர்வேயர்கள்

பேரையூர்: பேரையூர் தாலுகாவில் பேரையூர், டி. கல்லுப்பட்டி, ஏழுமலை, சேடப்பட்டி, அத்திப்பட்டி, மோதகம் ஆகிய ஆறு குறுவட்டங்களில் சர்வேயர்கள் பணியில் உள்ளனர்.பொதுமக்களுக்கான நிர்வாகத்தை எளிதாக்க நில அளவைத் துறையில் இணையதள வசதி உள்ளது. விண்ணப்பங்களை இணையத்தில் பதிவிட்டால், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடங்களை இணையத்தின் வாயிலாகவே பதிவிறக்கமும் செய்ய முடியும். இந்த வசதி வந்த பின் பேரையூர் தாலுகா சர்வேயர்கள் புது டெக்னிக்கை பின்பற்றத் துவங்கிவிட்டனர்.கடந்தாண்டு நிலத்தை அளப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை பேரம் பேசி நிலம் அளக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சேடப்பட்டி சர்வேயர் ஜோதியை ரூ.2000 லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து சர்வேயர்கள் உதவியாளர்களை நியமித்து லஞ்சம் பெறுகின்றனர்.ஆன்லைன் மூலம் அப்ளை செய்யும் விண்ணப்பங்களில் உள்ள அலைபேசி எண்ணுக்கு புரோக்கர்கள் அழைத்து பேசுகின்றனர். அருகிலுள்ள டீக்கடைகளுக்கு வரவழைத்து அவர்களிடம் பேரம் பேசுகின்றனர். தற்போது நிலத்தின் மதிப்புக்கேற்ப குறைந்தபட்சம் ரூ. பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை கேட்பதாக விண்ணப்பதாரர்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ