உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சட்டவிரோத -குவாரிக்கு தடை கோரி வழக்கு

 சட்டவிரோத -குவாரிக்கு தடை கோரி வழக்கு

மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கம்பளிநாயக்கன்பட்டி நடராஜன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: பலக்கனுாத்து கிராமத்தில் குறிப்பிட்ட சர்வே எண்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் சட்டவிரோதமாக கல் குவாரி, கிரஷர் யூனிட் நடத்துகின்ற னர். கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். குவாரி, கிரஷருக்கு தடை விதிக்க வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராமநாதன் ஆஜரானார். நீதிபதிகள், திண்டுக்கல் மேற்கு தாசில்தார் ஆய்வு செய்து அக்.27ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை