விரிவுரையாளர் தற்கொலை
மதுரை: மதுரை அவனியாபுரம் சண்முகம் 35. மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் கணித விரிவுரையாளராக பணியாற்றினார். மனைவி, மகன் உள்ளனர். சில நாட்களாக சண்முகத்தின் நடத்தை தொடர்பாக குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிலையில், சண்முகம் துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.