உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 5 இடங்களில் தொழுநோய் பாதிப்பு அதிகம்

மதுரையில் 5 இடங்களில் தொழுநோய் பாதிப்பு அதிகம்

மதுரை: சுகாதாரத்துறை சார்பில் மதுரையில் 5 இடங்களில் தொழுநோய் கண்டறியும் முகாம் நேற்று துவங்கியது.மாவட்டத்தில் ஆண்டுதோறும் 100 பேர் தொழுநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதார துணை இயக்குநர் குமரகுருபரன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கை, கால், உடலில் அரிப்பு இல்லாத உணர்ச்சியற்ற தேமல் இருந்தால் ஆரம்பநிலையிலேயே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அனைத்து மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இது பாக்டீரியா தொற்றால் பரவும் நோய். இதன் வேகம் குறைவு என்பதால் ஒருவருக்கு தொற்று பரவிய 20 ஆண்டுகள் கழித்து கூட நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் நோய் உருவாகும். தோலில் தேமல் பார்த்தவுடன் சிகிச்சை பெற்றால் முழுமையாக குணமடையலாம். கவனிக்காவிட்டால் நரம்பை பாதித்து தொடர்ச்சியாக எலும்பை பாதிக்கும். கை, கால் விரல்களை மடக்க முடியாத நிலை ஏற்படும். கண்களும் பாதிப்புக்குள்ளாகும்.மாவட்டத்தில் ஆண்டுக்கு 100 பேர் புதிதாக பாதிக்கப்பட்டாலும் கள்ளந்திரி, சமயநல்லுார், அலங்காநல்லுார், செக்கானுாரணி, தொட்டப்பநாயக்கனுார் பகுதிகளில் தான் பாதிப்பு அதிகம். எனவே பிப். இறுதி வரை இந்த 5 பகுதிகளில் தொழுநோய் உள்ளதா என அனைத்து வீடுகளிலும் சென்று கண்காணித்து புள்ளிவிவரங்களை சேகரிக்கிறோம் என்றார். தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் விஜயன் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ