உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேர்வை கொண்டாடுவோம் விழிப்புணர்வு

தேர்வை கொண்டாடுவோம் விழிப்புணர்வு

திருநகர்: மதுரை விளாச்சேரி கிராம இளைஞர் மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 'தேர்வை கொண்டாடுவோம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிராம இளைஞர் மன்ற தலைவர் சிவசரவணன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் திருவெங்கடேசன் வரவேற்றார். செயலாளர் கண்ணன் முன்னிலை விகித்தார். முத்துத் தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்த் துவக்கி வைத்தார்.ஆடிட்டர் ஜெயபாண்டியன், ஆசிரியர்கள் சிவராமகிருஷ்ணன்,ஆனந்த், சிவபாரதி, ஹர்ஷத், சந்திரவதனச் செல்வி, பேராசிரியர் முகமது அஜ்மல் கான், சிவசக்தி கல்வி நிறுவன தலைவர் விஜயகுமார், கல்வியாளர் சுஜாதா பேசினர். சிராஜ் நன்றி கூறினர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்கள் அரசு பொது தேர்வு குறித்த அச்சத்தை போக்கவும், படிக்கும் முறைகளையும், பயமின்றி எழுதுவது குறித்தும், அதிக மதிப்பெண்கள் பெறுவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நிகழ்ச்சி நடந்தது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி