உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளக்கேற்றி வழிபாடு

விளக்கேற்றி வழிபாடு

மேலுார்: வெள்ளலுார் நாடு வெள்ளி மலையில் 18 ம் நுாற்றாண்டில் ஆங்கிலேய கேப்டன் சார்லஸ் ரூம்லே படைகளுக்கு வரி கொடுக்க மறுத்து, வெள்ளலுார் நாட்டைச் சேர்த்த ஐந்தாயிரம் முன்னோர்கள் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்தனர். அந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையவும், வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் விதமாகவும் மக்கள் ஐந்தாயிரம் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளலுார் நாடு வீரணன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்