உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்லீரல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லீரல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் கல்லீரல் தினத்தை முன்னிட்டு கொழுப்பு படிந்த கல்லீரல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ் அர்த்தனாரி பேசுயதாவது: இந்நோய் மூன்றில் ஒருவரை தாக்குகிறது. ஆரோக்கியமில்லாத வாழ்க்கை முறையே கல்லீரல் பாதிப்பு அதிகரிக்க காரணம். உடற்பருமன், நீரிழிவு நோயினால் கல்லீரலில் கொழுப்பு அதிகளவில் உருவாகிறது. இளைஞர்களிடம் நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. மஞ்சள் காமாலை, ஹெபடைட்டிஸ் அறிகுறிகளும் பிந்தைய நிலைகள் தான். இதனை கட்டுப்படுத்த உடல் எடை, உடற்பயிற்சியுடன் கூடிய 'உணவே மருந்து' என்பது முக்கியம் என்றார்.டாக்டர்கள் ஸ்ரீனிவாசன் ராமச்சந்திரன், மோகன், ஸ்ரீவித்யா, எம். ரமேஷ், சரவணன், மதுரை கிளை ஏ.எஸ்.ஐ., சேதுராமன் பங்கேற்றனர். டா வின்சி அறுவைசிகிச்சை ரோபோவின் நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. டாக்டர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை