உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க கடனுதவி

முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க கடனுதவி

மதுரை; தமிழகத்தில் மறுவேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரர்கள் நலனுக்காக 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதில் தாய்நாட்டுக்காக இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்ய, தொழில் துவங்க வங்கிகள் மூலம் ரூ.ஒரு கோடி வரை கடனுதவியில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்பட உள்ளது. தொழில் துவங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். இதில் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்து வாழும் 25 வயதுக்குட்பட்ட திருமணமாகாத மகன், மகள், விதவையின் மகள்கள், பணியின் போது இறந்த வீரர்களின் மனைவிகள்(மறுமணம் செய்து கொள்ளாதவர்கள்) பயன்பெறலாம்.மதுரை மாவட்டத்தில் பதிவு செய்து மறுவேலைவாய்ப்பு பெறாமல் உள்ள மேற்கண்டோர் இத்திட்டத்தில் தொழில் துவங்கி பயனடையலாம். அதிகபட்ச வயது வரம்பு 55. தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித் தகுதி கிடையாது. வருமான வரம்பும் இல்லை என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ