மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
09-Sep-2026
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அடுத்த மேக்கிழார்பட்டி ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. 2025ல் மீண்டும் இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டது. இன்று அக்.,8 ல், இந்த இடத்தை அளவீடு செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்த நிலையில், முன்னர் பட்டா வாங்கியவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு நபர்களுக்கு கொடுக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அளவிடும் பணியை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதிய பயனாளிகள், ஏற்கனவே அறிவித்தபடி இன்று அளவீடு செய்து தரவேண்டும் என ஆர்.டி.ஓ., அலுவலகத்தை நேற்று மாலை 6:00 மணியளவில் முற்றுகையிட்டனர். சப் கலெக்டர் உத்கர்ஷ்குமார், தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இன்று திட்டமிட்டபடி அளவீடு செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.
09-Sep-2026