மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை
14-Sep-2024
மதுரை : மதுரை மடீட்சியா ஹாலில் செப்.27 முதல் 29 வரை காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை ஐடியல் ஹோம் கண்காட்சி நடக்கிறது.மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன், கண்காட்சி தலைவர் ராமசாமி கூறியதாவது: 30 ஆண்டுகளாக மடீட்சியா சார்பில் ஐடியல் ஹோம் கண்காட்சி நடத்தப்படுகிறது. வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் பொதுமக்கள் வாங்குவதற்கு இந்த கண்காட்சி பாலமாக விளங்கும். கண்காட்சி நடக்கும் 3 நாட்களும் ஆர்தோ பவுண்டேஷன் மற்றும் வேல் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. பொது பரிசோதனை, ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், உயரம், எடை அறிதல், ரத்தப்பரிசோதனை, எலும்பின் அடர்த்தியை கண்டறிதல், இலவச பிசியோதெரபி பயிற்சி உண்டு. அறுவை சிகிச்சை நிபுணரின் இலவச மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகள் தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.தினமும் மதியம் 1:00 மணி மற்றும் இரவு 8:00 மணிக்கு நுழைவுச்சீட்டு குலுக்கல் நடத்தி பரிசு வழங்கப்படும். இரவு 8:30 மணிக்கு நடைபெறும் பம்பர் குலுக்கலில் முதல்நாள் பரிசாக கட்டில், 2ம் நாள் டைனிங் டேபிள், 3ம் நாள் சோபா, மெத்தை வழங்கப்படும் என்றனர்.
14-Sep-2024