வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மடிசியாவின் பிரின்டிங் பக்ககிங் எஸ்போ மிக அருமை. லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடன் எஸ்போ உள்ளது . தொழில் முனைவோரும் கல்லூரி மாணாக்கர்களுக்கு சென்று பார்க்கவேண்டிய ஒன்று
மதுரை: மதுரை ஐடா ஸ்கட்டர் வர்த்தக மையத்தில் மடீட்சியா சார்பில் அச்சு, பேக்கேஜிங் தொழில் கண்காட்சி தலைவர் கோடீஸ்வரன் தலைமையில் நேற்று (டிச. 20) துவங்கியது. தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவன இயக்குநர் அம்பலவாணன் கண்காட்சியை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், ''நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உற்பத்தியை பெருக்க வேண்டும். புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க இக்கண்காட்சி வழிவகுக்கும். ஒவ்வொரு தயாரிப்பும் குறைந்த விலையில், தரமானதாக, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும்'' என்றார்.கண்காட்சி தலைவர் பொன் குமார், மதுரை மண்டல ஜி.எஸ்.டி., சுங்கம் கூடுதல் கமிஷனர் வெங்கடேஷ்வரன், 'டான்சியா' பொதுச் செயலாளர் வாசுதேவன், மடீட்சியா செயலாளர் செந்திகுமார், முன்னாள் தலைவர் லட்சுமி நாராயணன், உட்பட பலர் பங்கேற்றனர். 120க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் பல்வேறு நிறுவனங்களின் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய அச்சு, பேக்கேஜிங் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டிச. 22 வரை பொதுமக்கள் மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
மடிசியாவின் பிரின்டிங் பக்ககிங் எஸ்போ மிக அருமை. லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடன் எஸ்போ உள்ளது . தொழில் முனைவோரும் கல்லூரி மாணாக்கர்களுக்கு சென்று பார்க்கவேண்டிய ஒன்று