உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை- சினிமா- 15.10

மதுரை- சினிமா- 15.10

விக்ரம் உடன் இணையும் அனிருத் 'வீர தீர சூரன்' படத்திற்கு பின் விக்ரமின் படங்களில் குழப்பம் நிலவியது. தற்போது 'ஹாய்' பட இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் இவர் நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆக் ஷன் கதையில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதன் மூலம் முதன்முறையாக இவர் விக்ரமுடன் இணைகிறார். முன்னதாக விக்ரமின் 'மகான்' படத்திற்கு இவர் இசையமைப் பதாக இருந்து பின்னர் நடக்காமல் போனது. மாதவன், நிமிஷாவின் 'லெகஸி' 'லெகஸி' என்ற வெப் தொடர் கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகி உள்ளது. இதில் மாதவன், நிமிஷா சஜயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்க, சாருகேஷ் சேகர் இயக்கி உள்ளார். சக்தி வாய்ந்த கேங்ஸ்டர் சாம்ராஜ்யத்தை நடத்தும் ஒருவர் தனக்கு பிறகு தனது சாம்ராஜ்யத்தை ஆள தகுதியான ஒருவரை தேடுகிறார். அந்த இடத்தை அடைவதற்கு நடக்கும் போட்டிதான் கதை. ஓடிடியில் வெளியாகிறது. மக்கள் திட்டாதது நம்பிக்கையை தந்தது: ஹரிஷ் கல்யாண் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்த 'டீசல்' படம் நாளை ரிலீஸாகிறது. ஹரிஷ் பேசியதாவது: தங்கத்தை விட அதிக மதிப்புமிக்க எரிபொருள் உலகத்திற்கு பின்னால் நடக்கும் கதை இது. மக்களுக்கான படமாக இருக்கும். ஆக் ஷன் ரோல் பண்ணியிருக்கேன். படத்தின் டிரைலர் வெளியான பின் யாரும் பெரிதாக திட்டவில்லை. அதுவே எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது'' என்றார். ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் 'சங்கராந்திகி வஸ்துனம்' இந்தாண்டு பொங்கலுக்கு தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் 'சங்கராந்திகி வஸ்துனம்'. இதை ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்க, ஹீரோவாக அக் ஷய் குமாரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி