மதுரை- சினிமா-
நியூமராலஜிப்படி எக்ஸ்ட்ரா ஒரு 'என்' நடிகை ஹன்சிகாவிற்கு சமீபகாலமாக பட வாய்ப்புகளும் இல்லை, சொந்த வாழ்விலும் நிறைய பிரச்னை. ஆகையால் ஹன்சிகா மோத்வானி என்ற பெயரில் மோத்வானியில் நியூமராலஜிப்படி கூடுதலாக ஒரு 'என் (N)' ஐ சேர்த்து இருக்கிறார். இதனால், தனது கஷ்டங்கள், பிரச்னைகள் மாறும் என அவர் நம்புகிறார். சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா தீபாவளி கொண்டாட்டம் நடிகை நயன்தாரா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி உடன் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' என்ற படத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவி வீட்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் நயன்தாரா பங்கேற்றார். இந்த போட்டோக்கள் வைரலாகின. இதில் நடிகர்கள் ராணா, ஸ்ரீலீலாவும் கலந்து கொண்டனர். சூப்பர் மாரி சூப்பர் : 'பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் 'பைசன்'. இந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினி, ''சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன், படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது, வாழ்த்துக்கள்'' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மாரி நன்றி தெரிவித்துள்ளார். குழந்தையை அறிமுகம் செய்த தீபிகா --- ரன்வீர் பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கிற்கு கடந்தாண்டு செப்டம்பரில் 'துவா' என்ற பெண் குழந்தை பிறந்தது. முதன்முதலாக தங்களது குழந்தையை தீபாவளி தினத்தில் வெளி உலகிற்கு அறிமுகம் செய்தனர். தீபிகாவின் இந்த இன்ஸ்டா பதிவிற்கு 18 மணிநேரத்தில் 63 லட்சம் லைக்குகள் கிடைத்தன. 'டியூட்' விவாதங்களை உருவாக்கி உள்ளது : பிரதீப் ரங்கநாதன் டியூட் படத்தின் நன்றி விழாவில் பேசிய ஹீரோ பிரதீப் ரங்கநாதன், ''இந்த படம் திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அனைவருக்கும் நன்றி. அதேசமயம் சில விவாதங்களையும் உருவாக்கி உள்ளது. சிலருக்கு கதையில் மாற்று கருத்து உள்ளது. ஆனாலும் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது வேறொரு விஷயம் தெரிய வரும். இந்த படம் பல ஆண்டுகளுக்கு பார்க்கப்பட்டு கொண்டே இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.