மேலும் செய்திகள்
ரயில் சேவையில் மாற்றம்
10-Nov-2024
மதுரை : சேலம் கோட்டத்திற்கு உட்பட்டபல்வேறு இடங்களில்நடைபெற இருக்கும் பொறியியல் பணிகள் காரணமாக மதுரை - கோவை இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இன்று (டிச. 2) மற்றும் டிச. 3, 5, 6, 8ல் காலை 7:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் இன்டர்சிட்டி ரயில் (16722) போத்தனுார் ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இன்டர்சிட்டி ரயில் (16721)டிச. 3, 5, 6, 8ல் மதியம் 2:45 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு இரவு 7:35 மணிக்கு வரும்.போத்தனுார் - கோவை இடையே இவ்விரு ரயில்களும்பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.
10-Nov-2024