உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை ஆவின் பால் வினியோகம் வாகன டெண்டர் முறைகேடு வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஆவின் பால் வினியோகம் வாகன டெண்டர் முறைகேடு வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : மதுரை ஆவினிலிருந்து பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை வினியோகிக்க வாகனங்களை இயக்க டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாக தாக்கலான வழக்கில் மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை செல்லத்துரை தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை ஆவின் நிறுவனத்திலிருந்து பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை பூத்களுக்கு வாகனங்கள் மூலம் வினியோகிக்க 2023 ல் டெண்டர் கோரப்பட்டது. வாகனங்களுக்கு வாடகையை ஆவின் வழங்குகிறது. சில வழித்தடங்களில் வினியோகிக்க எனது பெயர் தேர்வு செய்யப்பட்டது. வாடகை குறைப்பு பேச்சுவார்த்தை நடந்தது. ஏற்கனவே நிர்ணயித்த தொகையிலிருந்து 10 சதவீதம் உயர்வுடன் வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டது. என்னைப்போல் சிலருக்கு வெவ்வேறு வழித்தடங்களுக்கு 10 சதவீத உயர்வுடன் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.மற்ற 25 வழித்தடங்களில் வாகனங்களை இயக்க 20 முதல் 57 சதவீதம்வரை முறைகேடாக வாடகையை உயர்த்தி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.சில அதிகாரிகள் சுயலாபத்திற்காக வாகன உரிமையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து வாடகையை உயர்த்தி, மதுரை ஆவினுக்கு ரூ.42 லட்சம் நிதியிழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.20 முதல் 57 சதவீதம் வாடகையை உயர்த்தி ஒப்பந்தம் இறுதி செய்து, 25 வழித்தடங்களுக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மறு டெண்டர் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுதாரர் அனுப்பிய மனுவை ஆவின் மேலாண்மை இயக்குனர், கமிஷனர், மதுரை ஆவின் பொது மேலாளர், கலெக்டர் 3 மாதங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி