| ADDED : பிப் 21, 2025 05:53 AM
மதுரை : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முதற்கட்டமாக 24 சதவீதம் முடிந்துள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.மதுரை தோப்பூரில் 220 ஏக்கரில் எய்ம்ஸ் வளாகத்தின் கட்டுமானம் 2024 மே 22 ல் துவங்கியது. கட்டுமான திட்டத்தின் மதிப்பு ரூ.2021 கோடி. இரண்டு கட்டங்களாக கட்டுமானம் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கல்வி வளாகம், புறநோயாளிகள் பிரிவு, மாணவர்கள் விடுதி, அலுவலக கட்டடங்கள் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது 24 சதவீத பணிகள் முடிந்துள்ளது. டிசம்பருக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=em92h48z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 782 சதுர மீட்டர் பரப்பளவில் 42 பிரிவு கட்டடங்களாக கட்டுமானம் நடைபெறும். தொற்று நோய் பிரிவுக்கான 150 படுக்கை, ஆயுஷ் பிரிவுக்கான 30 படுக்கைகள் உட்பட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 900 படுக்கைகள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 5000 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற முடியும். ஆயுஷ் பிரிவில் ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவத்தை உள்ளடக்கி செயல்படுத்தப்படும். மேலும் 750 இருக்கைகளுடன் கூடிய பிரமாண்ட ஆடிட்டோரியம், குடியிருப்பு வளாகம், விளையாட்டு மைதானத்திற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட உள்ளது.ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., பாடப்பிரிவிற்கு அதிகரித்து வரும் மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது. மேம்பட்ட கல்வித்தரத்துடன் முழுமையான ஆசிரிய பணியிடங்களுடன் செயல்படுகிறது.தற்போது ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தற்காலிமாக பயில்கின்றனர். இந்தாண்டு இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரி இங்கேயே நிரந்தரமாக்கப்பட்டு மாணவர்கள் மாற்றப்படுவர். இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.முழு கட்டுமானமும் 2027 பிப்ரவரிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.