உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல் சாகுபடி பயிற்சி முகாம்

நெல் சாகுபடி பயிற்சி முகாம்

மேலூர் : மேலூர் வட்டார விவசாயிகளுக்கான திருந்திய குறுவை நெல் சாகுபடி பயிற்சி முகாம் பூசாரிபட்டியில் நடந்தது. விவசாய இணை இயக்குகர் சங்கரலிங்கம், துணை இயக்குனர் சம்பத்குமார் ஆலோசனைபடி நடந்த இம் முகாமினை உதவி இயக்குனர் கணேசன் துவக்கி வைத்தார். நடவு இயந்திரத்தின் மூலம் பணிகளை எவ்வாறு செய்வது? என விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி பற்றி உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது : இம் முறையில் ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய ஒரு சென்ட் பரப்பில் பாய் நாற்றங்கால் முறையில் மூன்று கிலோ விதையை கொண்டு நாற்றாங்கால் அமைக்க வேண்டும்.

14 நாட்கள் ஆன நாற்றுகளை 25க்கு 25 செ.மீ., இடைவெளியில் குத்துக்கு ஒரு நாற்று வீதம் சதுர நடவு செய்ய வேண்டும். சரியான இடைவெளியில் நாற்றுக்களை சீராக நடுவதற்கு மார்க்கர் கருவியை பயன்படுத்த வேண்டும். நடவு செய்த 15 நாட்கள் முதல் 'கோனோ வீடர்' களை எடுக்கும் கருவி கொண்டு 10 நாட்களுக்கு ஒரு முறை நான்கு முறை களைகளை நிலத்தில் அமுக்கி விட வேண்டும். அக் களை, பயிருக்கு உரமாகிவிடுவதுடன் வேர் பகுதிகளுக்கு காற்றோட்டம் கிடைக்க உதவுகிறது, என்றார். துணை விவசாய அலுவலர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ