| ADDED : செப் 01, 2011 11:43 PM
மதுரை : சிவகங்கை புதுவயல் அருகே நில அபகரிப்பு புகார் கொடுத்ததற்காக மிரட்டிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி மீது நடவடிக்கை கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கலானது. புதுவயல் அப்பளையை சேர்ந்த கருப்பையா தாக்கல் செய்த மனு: அப்பளையில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களை, கணேசன் என்பவரிடமிருந்து சோழன் பழனிச்சாமி எம்.எல்.ஏ., கிரையம் பெற்றுள்ளார். அவரது மனைவி பஞ்சவர்ணம் பெயரில் பட்டா மாறுதல் செய்தார். இதுகுறித்து சிவகங்கையில் எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தேன். இதனால் என்னை எம்.எல்.ஏ., தூண்டுதல் பேரில் ஆதரவாளர்கள், கடத்தி கொலை செய்வதாக மிரட்டினர். காரில் ஏற்றிச் சென்று வெள்ளைதாளில் கையெழுத்தி வாங்கினர். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜின்னா தாக்கல் செய்தார். மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.