மேலும் செய்திகள்
மதுரை மாவட்ட நிகழ்ச்சி
28-Mar-2026
கோயில் * சித்திரை பெருவிழா - 8ம் நாள் - பட்டாபிஷேகம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கொடிமரம் முன்பு ஊடல் உற்ஸவம், கிழக்கு சித்திரை வீதி, மீனாட்சி கோயில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி, மேல மாசி வீதி வழியாக தங்கப்பல்லக்கு, காலை 10:00 மணி, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், இரவு 7:05 மணி, மாசி வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உலா, இரவு 9:00 மணி. * ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 4:30 மணி. * ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி. பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. * லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமி பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி. * ஆனந்த வாழ்வு ரகசியங்கள்: நிகழ்த்துபவர் - பிரேமகுமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. * கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு திவ்ய சரித்திரம்: நிகழ்த்துபவர் - சுதர்சன் பாகவதர், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மாலை 6:30 மணி. பொது * விஜயதயா ரியல்டர்ஸின் அருணாச்சலா நகர் திறப்பு விழா: ஒத்தக்கடை - திருவாதவூர் மெயின் ரோடு, புது தாமரைப்பட்டி அருகில், மதுரை, சிறப்பு விருந்தினர்: சினிமா இயக்குநர் சேரன், காமெடி நடிகர் ராமர், பாடகர் மதிச்சியம் பாலா, காலை 10:00 மணி. * கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, கவியரங்கம் தலைமை: கவிஞர் ரவி, கவிஞர் அரங்க கிரிதரன் எழுதிய 'மரபுத் தமிழ்மாலை' நுால் வெளியிடுபவர்: மன்றம் தலைவர் வரதராஜன், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, புரட்சிப் பாவலர் மன்றம், காலை 10:00 மணி. * 'பேசும் கலை; பேச்சுக் கலை' - உலக புத்தக தின விழாவை முன்னிட்டு பேச்சுப் பயிற்சிப் பட்டறை: திருவள்ளுவர் மன்றம், பொன்மேனி பெரியவர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: சண்முகதிருக்குமரன், ஏற்பாடு: சண்சரண் சமூகம் கல்விநல அறக்கட்டளை, மதுரை இலக்கியப் பேரவை, காலை 10:30 மணி. விளையாட்டு * 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தடகளம், குழு விளையாட்டு கோடை கால இலவச பயிற்சி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 6:30 முதல் 8:00 மணி வரை, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.
28-Mar-2026