மதுரை டாக்டருக்கு உயரிய விருது
மதுரை : மதுரை செனாய் நகர் ஜெ.கே. நரம்பியல் மருத்துவ மையத்தின் அதிநவீன வலிப்பு நோய் மைய தலைவர் டாக்டர் ஹரிஷ் ஜெயக்குமார். அவருக்கு லண்டன் 'ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன்ஸ்' மூலமாக உயரிய எப்.ஆர்.சி.பி., விருது வழங்கப்பட்டது. இது அவருக்கு மூன்றாவது எப்.ஆர்.சி.பி., விருது. இந்தியாவிலேயே இளம் வயதில் இவ்விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்.