மேலும் செய்திகள்
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 2010--2020ம் ஆண்டுகளில் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அவர்களில் பல்வேறு வகைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு, விருது வழங்கப்பட்டது. முதல்வர் அசோக்குமார் வரவேற்றார்.தலைவர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்து பேசுகையில், ''இக்கல்லுாரியில் படிப்பவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் முன்னாள் மாணவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். முன்னாள் மாணவர் அறக்கட்டளைக்கு எப்.ஆர்.சி.ஏ. உரிமம் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.முன்னாள் மாணவரும் சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனருமான அர்ஜூனன் விருதுகள் வழங்கி பேசுகையில், ''சமீப காலத்தில் அறிவியல் தொழில்நுட்பம் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளது. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது'' என்றார். மெக்கட்ரானிக்ஸ் துறைத் தலைவர் பழனிநாதராஜா நன்றி கூறினார்.
03-Dec-2024