உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை பாத்திமா கல்லூரியில் "அமெரிக்க விசா ஆலோசனை

நாளை பாத்திமா கல்லூரியில் "அமெரிக்க விசா ஆலோசனை

மதுரை : அமெரிக்க விசா தொடர்பான ஆலோசனை கூட்டம், மதுரை பாத்திமா கல்லூரியில் நாளை காலை 9 மணிக்கு துவங்குகிறது.அமெரிக்காவில் கல்வி பயில, வேலை பார்க்க, குடியுரிமை பெற, வர்த்தக பரிமாற்றம் செய்வதற்கு விசா வழங்கப்படுகிறது. நாளை காலை 9 மணிக்கு கல்வி பயில்வதற்கான விசா பெறுவதற்கான ஆலோசனை நடக்கிறது. 10 மணிக்கு, வேலை தொடர்பான (எச் 1பி, எல், பி1, பி2) விசா ஆலோசனை, 11 மணிக்கு குடியுரிமை விசா, 12 மணிக்கு அமெரிக்க குடிமக்கள் சேவை தொடர்பான விசா ஆலோசனை நடக்கிறது. மதியம் 3 மணிக்கு, மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில்வர்த்தக சங்கத்தில் வர்த்தகம் தொடர்பான விசா ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அமெரிக்கா செல்ல விரும்புபவர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்கும் முறை, விதிகளை தெரிந்து கொள்ள, நாளை நடக்கும் ஆலோசனையில் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ