உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லயன்ஸ் சங்கம் சார்பில்புற்று நோய்க்கு சிகிச்சை

லயன்ஸ் சங்கம் சார்பில்புற்று நோய்க்கு சிகிச்சை

மதுரை:மதுரையில் லயன்ஸ் 324 பி மாவட்டம் சார்பில் புற்று நோய் கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு மையம் நாளை திறக்கப்படுகிறது.மாவட்ட ஆளுனர் பி.எஸ்.நந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை அடையாறு புற்று நோய் தடுப்பு மையத்துடன் இணைந்து இலவச புற்று நோய் கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு மையம், மதுரை நரிமேடு சிங்கராயன் காலனி ஆண்ட்ரூஸ் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. இதை சர்வதேச முதல் துணை தலைவர் வென்மேடன் நாளை திறக்கிறார். புவி வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சியாக ஆக., 25ல் மாநிலம் முழுவதும் மூன்று லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றார்.டாக்டர் பூர்ணிமா ராபின், முன்னாள் ஆளுனர்கள் அண்ணாமலை, பாண்டியராஜன், அமைச்சரவை செயலாளர் பிரசன்னகுமார், ஆலோசகர் சண்முகசுந்தரம், விழாக்குழு நிர்வாகிகள் செந்தில்லட்சுமி, நாச்சியப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் நெல்லைபாலு உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை