உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சென்னை, நாகர்கோயில், ராமேஸ்வரம்

சென்னை, நாகர்கோயில், ராமேஸ்வரம்

மதுரை:மதுரை கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் என்.வேணுகோபால் அறிவிப்பு: சென்னை சென்ட்ரல் - நாகர்கோயில் (வ.எண் 06047) வாராந்திர சிறப்பு ரயில் (வழி சென்னை எழும்பூர், விருதாச்சலம்), சென்னையில் இருந்து (14.08.11 - 09.08.11) இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோயிலுக்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு வந்தடையும். நாகர்கோயில் - சென்னை (06048) ரயில் நாகர்கோயிலில் இருந்து (15.08.11 - 10.10.11) மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மறுநாள் காலை 5 மணிக்கு சென்றடையும்.கோவை - ராமேஸ்வரம் (06051) வாராந்திர சிறப்பு ரயில் கோயமுத்தூரில் இருந்து (06.08.11 - 08.10.11) இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, ராமேஸ்வரத்திற்கு மறுநாள் காலை 7 மணிக்கு வந்தடையும். ராமேஸ்வரம் - கோவை ரயில் (06052) ராமேஸ்வரத்தில் இருந்து (07.08.11 - 09.10.11) இரவு 7 மணிக்கு புறப்பட்டு கோயமுத்தூருக்கு மறுநாள் காலை 5 மணிக்கு சென்றடையும். இன்று முதல் முன்பதிவு துவங்குகிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ