உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மலை மீது கிடந்த எலும்புக்கூடு

மலை மீது கிடந்த எலும்புக்கூடு

மேலூர்:மேலூர் அருகில் உள்ள நரசிங்கம்பட்டி மலை மீது பாதி அழுகிய நிலையில் எலும்பு கூடாய் ஒரு பிணம் கிடப்பதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து. பிணத்தின் அருகில் காலியான பிராந்தி மற்றும் விஷ பாட்டில்கள் கிடந்தது. பக்கத்தில் கிடந்த துணிப் பையில் முகவரி மற்றும் மொபைல் போன் எண் இருந்தது. அதில் தொடர்பு கொண்ட போது கண்ணன் என்பவர் நேரில் வந்து இறந்தது தனது தந்தை என அடையாளம் காட்டினார்.ஆறு மாதத்திற்கு முன்பு அழகாபுரியை சேர்ந்த சோமகிரி(70) என்பவர் காணாமல் போய் விட்டதாக மேலவளவு போலீசில் அவரது மகனான கண்ணன் புகார் செய்துள்ளது தெரிய வந்தது. மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ