மதுரை:சென்னை பெப்பிள்ஸ் நிறுவனம் சார்பில், மதுரை கே.கே. நகர் விஜய்
மகாலில் கல்வி மற்றும் பொதுஅறிவு தகவல்கள் அடங்கிய 'டிவிடி' கண்காட்சி
நடக்கிறது.மழலையர்களுக்கு தெனாலிராமன், பீர்பால் கதைகள், விளையாட்டு, பாப்பா பாடல்,
வாய்ப்பாட்டு, ஆத்திசூடி, திருக்குறள், தேவதை கதை 'டிவிடி'க்கள்
விற்பனைக்கு உள்ளன. பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும்
தொகுக்கப் பட்டுள்ளன. யோகாவின் வகைள், ஏரோபிக்ஸ் பயிற்சி, நடனம்,
உடற்பயிற்சி குறித்தும், சைவ, அசைவ, மைக்ரோவேவ் சமையல் குறிப்புகள், பிற மொழி
கற்பித்தல் 'டிவிடி'க்கள்' உள்ளன. வரைபடங்கள், ஐ.ஐ.டி., தேர்வுக்கு
தயாராதல், போட்டித் தேர்வுக்கான கொள்குறி வகை வினா விடைகள், மருத்துவம்,
பொறியியல் தேர்வுக்கான பயிற்சி 'டிவிடி'க்கள் உள்ளன. மழலையர்களுக்கான
'டிவிடி'க்களுக்கு,20 முதல் 50 Œதவீதம்தள்ளுபடி. ஆக., 22 ம் தேதி வரை, காலை
10 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.