உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறுங்கால நிதி ஏழைகளின் பொருளாதாரத்தை உயர்த்துகிறதுநாகமலை

குறுங்கால நிதி ஏழைகளின் பொருளாதாரத்தை உயர்த்துகிறதுநாகமலை

புதுக்கோட்டை:நாகமலைபுதுக் கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி பொருளாதாரத்துறையும், யு.ஜி.சி.யும் இணைந்து 'குறுங்கால நிதி மற்றும் ஏழ்மையை கட்டுப்படுத்தும் ஒரு கருவி' என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கை நடத்தின. அமைப்பாளர் பிரடரிக் வரவேற்றார். கல்லூரி தலைவர் மகேந்திரவேல் தலைமை வகித்தார். செயலாளர் சிவசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலை பெண்கள் கல்வித்துறை இயக்குனர் மணிமேகலை துவக்கி வைத்து பேசுகையில், ''ஏழைகளின் வாழ்வில் குறுங்கால நிதி முக்கிய பங்கு வகிக்கிறது. இது அவர்களின் பொருளாதார வாழ்க்கையை உயர்த்துவதாக உள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் குறுங்கால நிதியில் ஏதேனும் ஒரு தொழிலை துவங்கி முன்னேற வேண்டும்'' என்றார். நபார்டு வங்கியின் மதுரை கிளை உதவி பொது மேலாளர் சங்கரநாராயணன் ''குறுங்கால நிதி பெறும் வழிமுறைகள், எந்த அளவிற்கு வழங்கப்படும்'' என்பது குறித்து விளக்கினார். முதல்வர் மாரீஸ்குமார் உட்பட பலர் பேசினர். பேராசிரியர் மாரிச்சாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ