உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அழகர்கோவிலில் ஆடித்திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது

அழகர்கோவிலில் ஆடித்திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கியது

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக., 13ல் தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான அங்குரார்பணம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதற்காக காலை எட்டு மணிக்கு சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கொடி மேடை முன் எழுந்தருளினார். அனுமார் திருஉருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, தீப ஆராதனை நடந்தது. பின் பெருமாளுக்கு பல்வேறு ஆராதனைகள் நடந்தன. காலை 10.20 மணிக்கு தேர் பணிகள் துவங்குவதற்காக, அங்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. இரவு அன்ன வாகனத்தில் புறப்பட்ட பெருமாள் கோயிலை வலம் வந்தார். இன்று முதல் தினமும் காலையில் பல்லக்கிலும், இரவில் முறையே சிம்மம், அனுமார், கருடன், சேஷம், யானை, குதிரை, பூச்சப்பரத்தில் புறப்படும் பெருமாள் கோயிலை வலம் வருவார். தேரோட்டம் ஆக., 13ல் காலை 8.30 மணிக்கு மேல் ஒன்பது மணிக்குள் நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் தேரோடும் பாதை வழியாக, கோட்டை வாயிலை சுற்றி வலம் வருவார். ஆக. 14ல் திருவிழா சாற்றுமுறையும், மறுநாள் உற்சவ சாந்தியும் நடக்கிறது. பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், மதுரை மண்டல இணை கமிஷனர் சுதர்சன், துணை கமிஷனர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ