உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வங்கிகள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர் பாதிப்பு

வங்கிகள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர் பாதிப்பு

மதுரை:வங்கிகளில் தனியார் மயத்தை எதிர்த்து, அனைத்து வங்கிகளின் அலுவலர், ஊழியர்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் நேற்று நடந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.மதுரை மேலவெளி வீதி பாரத் ஸ்டேட் வங்கியின் மெயின் கிளை முன் அனைத்து வங்கி அலுவலர், ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கிகளில் தனியார் மயத்தை கைவிட வேண்டும். சிறு வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்கும் திட்டம், 'அவுட்சோர்ஸிங்' முறையை கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகளைப் போல வங்கிகளிலும் ஐந்து நாட்கள் வேலைதிட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். நிரந்தரப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் வாரிசு நியமனத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.ஸ்டேட் வங்கி அலுவலர் சங்க துணைத் தலைவர் நவரத்தின பாண்டி, வங்கி யூனியன்களின் ஒருங்கிணைந்த அமைப்பின் அமைப்பாளர் சுந்தரராஜன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை