உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேன்-கார் மோதல் 6 பேர் படுகாயம்

வேன்-கார் மோதல் 6 பேர் படுகாயம்

கொட்டாம்பட்டி:வேலூரைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி(51). இவர் தனது குடும்பத்துடன் இன்னோவா காரில் ராமேஸ்வரம் சென்றுவிட்டு, நேற்றுமுன்தினம் இரவு ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். கொட்டாம்பட்டி ஒன்றியம் பொட்டபட்டி பிரிவு அருகே நான்குவழிச் சாலையில் செல்லும்போது, திருச்சியிலிருந்து மதுரைக்கு விஷவெள்ளரி ஏற்றிக்கொண்டு வந்த வேன் டிராக் மாறி, எதிரேவந்த கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த சரவணமூர்த்தி, லதா(43), கனகராஜ்(24), பிரதாபன்(24), சித்ரா(43), பாஸ்கரன்(48) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொட்டாம்பட்டி போலீசார் விபத்திற்குக் காரணமான வேனைக் கைப்பற்றி தப்பியோடிய கெங்குவார்பட்டியைச் சேர்ந்த வேன் டிரைவர் மதுரைராஜனைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை