உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காங்கிரசை அழிவுப் பாதையில் கொண்டு செல்லும் தங்கபாலு

காங்கிரசை அழிவுப் பாதையில் கொண்டு செல்லும் தங்கபாலு

மதுரை:''காங்கிரசை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் தங்கபாலுவுக்கு, எங்களை நீக்க அதிகாரம் இல்லை,'' என 'நீக்கப்பட்டதாக' அறிவிக்கப்பட்ட காங்., சீரமைப்புக்குழு துணை அமைப்பாளர் இதயதுல்லா குற்றம் சாட்டினார். மதுரையில் அவர் கூறியதாவது:சீரமைப்புக்குழு அமைப்பாளர் வடிவேலு, என்னை ( இதயதுல்லா) மற்றும் மாநில செயலாளர் ஜோதி ராமலிங்கத்தை நீக்குவதாக தங்கபாலு அறிவித்துள்ளார். இந்நடவடிக்கை போலித்தனமானது. சட்டசபை தேர்தலின் போது, வேட்பு மனுவில் பொய் தகவல்களை தெரிவித்ததாக தங்கபாலு மீது தேர்தல் கமிஷன் குற்றம் சாட்டியது. 80 லட்சம் உறுப்பினர்களை சேர்த்ததாக தங்கபாலு கூறுகிறார். அந்தளவுக்கு உறுப்பினர்களை சேர்த்திருந்தால், காங்.,வெற்றி பெற்றிருக்கும். எங்களை சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழையக்கூடாது என, அவர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஆக.,9 தியாகிகள் தினத்தில் வடிவேலு தலைமையில் அங்கு செல்வோம். எங்களை அவரால் தடுக்க முடியாது. மலைவாழ் மக்களுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை தங்கபாலு அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அதிலிருந்து தப்பிக்க, முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுவது போல் தங்கபாலு நாடகமாடுகிறார். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் எம்.ஜி.ஆர்., ஆட்சியில் போடப்பட்டன. கூட்டணி விஷயத்திலும் தங்கபாலு, இரட்டை வேஷம் போடுகிறார். தமிழக காங்.,க்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி