உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் பெண்களை கடத்துவது ஏழு மாதங்களில் 124 வழக்குகள் அதிகரிப்பு

மதுரையில் பெண்களை கடத்துவது ஏழு மாதங்களில் 124 வழக்குகள் அதிகரிப்பு

மதுரை:மதுரையில் திருமணமான மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜன., முதல் ஜூலை வரை பெண்களை கடத்தியதாக 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில் உலகில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பது, வீட்டு வேலைகளில் சிறுமிகளை ஈடுபடுத்துவது என சிறுமிகளுக்கு நேரிடும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களை கடத்துவது மதுரையில் அதிகளவில் நடக்கிறது.கள்ளக்காதல் விவகாரம்: கள்ளக்காதல் வலையில் விழும் திருமணமான பெண்களில் சிலர் கணவர், குழந்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் செல்கின்றனர். மனைவி கடத்தப்பட்டதாக இருவர் கொடுத்த தனித்தனி புகார் குறித்து அலங்காநல்லூர் மற்றும் பெருங்குடி போலீசார் சில நாட்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்தனர். காதல் வலையில் விழும் 16 வயது பெண்கள் காதலனுடன் செல்லும் சம்பவங்கள் குறித்து போலீசார் 'கடத்தல்' பிரிவில் வழக்கு பதிவு செய்கின்றனர். ஜன., முதல் ஜூலை வரை 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அரசு இல்லத்தில் பெண்கள்: கடத்தப்படும் பெண்களை மீட்கும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். கோர்ட் உத்தரவுப்படி பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பெற்றோரிடம் செல்ல மறுப்பவர்களை சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிடப்படுகிறது. திருமண வயதை எட்டும்போது அவர்களது மனமாற்றத்தை பொறுத்து கோர்ட் முடிவு செய்கிறது.சீரழிவுக்கு யார் காரணம்?: பாலியல் உணர்வுகளை தூண்டும் சினிமாக்களை பார்ப்பதால் கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன. ''குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் கவனமின்மை, நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்காதது, தனிநபர் ஒழுக்கமின்மை போன்ற பல காரணங்களால் இச்சீரழிவுகள் ஏற்படுகிறது. இதை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என, போலீசார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை