உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாலிபால் போட்டி

வாலிபால் போட்டி

மதுரை : மதுரைக் கல்லூரி மேல்நிலை பள்ளியில் நடந்த, மாவட்ட வாலிபால் போட்டியில் 25 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், இ.பி.ஜி., பள்ளி அணியை மங்கையர்கரசி மேல்நிலை பள்ளி அணி வென்றது. பரிசளிப்பு விழாவில், மதுரைக் கல்லூரி வாரியச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தூரன் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஸ்ரீதேவி பரிசு வழங்கினார். முன்னாள் மாணவர் பேரவை தலைவர் டேனியல் மனோகரன், துணைத் தலைவர் ஜோசப், செயலாளர் ராஜாராம், அரசு வக்கீல் துரைபாண்டியன் மற்றும் ராஜப்பா பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ