| ADDED : செப் 01, 2011 02:11 AM
மேலூர் : பெரியாறு கால்வாய் மூலம் மேலூர் பகுதியில் நான்காயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற கான்கிரீட் கால்வாய் அமைக்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டது. ''பணிகள் விரைவில் துவங்கும்,'' என பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் அப்துல் ரசீத் தெரிவித்தார்.பெரியார் கால்வாயை பார்வையிட்ட செயற் பொறியாளர் அப்துல் ரசீத் கூறியதாவது: பெரியாறு பிரதான கால்வாயில், 12வது கிளைக் கால்வாயில் 1800 மீட்டரும், கொட்டகுடி வரத்து கால்வாயில் 1500 மீட்டரும், மானம்போக்கி வரத்து கால்வாயில் 1600 மீட்டருமாக மொத்தம் 4.5 கி.மீ., தூரத்திற்கு கான்கிரீட் கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளன. கொட்டகுடி, மானம்போக்கி, தாமோதரன், வைத்துக்கருப்பன், போஜனேந்தல், நரிக்குளம் கண்மாய்கள் சீரமைக்க உள்ளன.கரைகளை பலப்படுத்தி 12 மடைகள் கட்டப்பட உள்ளன. இப்பணிகளுக்கு அரசு ரூ.2 கோடி ஒதுக்கி உள்ளது. ஏற்கனவே திட்ட மதிப்பீடு கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் இத்தொகையை அரசு ஒதுக்கி உள்ளது. இப் பணிகளால் மொத்தம் 4,373 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், என்றார். உதவி செயற் பொறியாளர் மணிசேகரன், உதவி பொறியாளர் சிவப்பிரபாகரன் உடனிருந்தனர்.