உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க.,வில் 21; அ.தி.மு.க.,வில் 65

தி.மு.க.,வில் 21; அ.தி.மு.க.,வில் 65

மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க., சார்பில் விருப்பமனுத்தாக்கல் செய்ய நேற்றுடன் கெடு முடிந்தது. தலைமை அறிவித்த படி செப்.,5ல் தி.மு.க., சார்பில் விருப்ப மனுக்கள் பெற்றனர். 100 வார்டுகளை கொண்ட மாநகராட்சி தேர்தலுக்கான பொறுப்பாளராக சுப்பிரமணியம் செயல்பட்டார். தி.மு.க.,வில் மேயர் பதவிக்கு 21, கவுன்சிலர் பதவிக்கு 218 பேர் விருப்பமனுத்தாக்கல் செய்தனர். ஆரம்பம் முதலே அ.தி.மு.க.,வில் களைகட்டியது. மேயருக்கு 65, கவுன்சிலருக்கு 1001 பேர் விருப்பமனுத்தாக்கல் செய்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ, நகர் செயலாளர் போஸ் மனுக்களை பெற்றனர். உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தி.மு.க., சார்பில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. உசிலம்பட்டி ஈஸ்வரி மகாலில் தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணத்திடம், உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி பகுதிகளின் தி.மு.க., வினர் மனுக்களை கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ