உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நில அபகரிப்பு: கல்வி குழும தலைவருக்கு முன்ஜாமின்

நில அபகரிப்பு: கல்வி குழும தலைவருக்கு முன்ஜாமின்

மதுரை : மதுரையில் நில அபகரிப்பு வழக்கில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கத்திற்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் சமையாள், 55. இவருக்கு ரூ.1.25 கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது. அதை குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டுவதாக முத்துராமலிங்கம் மற்றும் கல்வி குழும ஊழியர் மீது சமையாள் புகார் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன், நிலத்திற்கு சென்ற தன்னை மிரட்டியதாக அவர்கள் மீது குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்து முத்துராமலிங்கம், ஊழியர் திருப்பதி வெங்கடேசன், கட்ட ஒப்பந்தக்காரர் விஜய்ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்தனர். முன்ஜாமின் கோரிய முத்துராமலிங்கம் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஆர்.மாலா முன்ஜாமின் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ