உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தானம் அறக்கட்டளை சார்பில் 750 கண்மாய்கள் சீரமைப்பு

தானம் அறக்கட்டளை சார்பில் 750 கண்மாய்கள் சீரமைப்பு

மதுரை : தமிழகத்தில் தானம் அறக்கட்டளை சார்பில் 750 கண்மாய்கள் சீரமைக்கப்பட்டு வருவதாக, அதன் நிர்வாக இயக்குனர் வாசிமலை தெரிவித்தார்.மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் 2005ல் துவக்கப்பட்டது. இதன் நோக்கம் வேலை வாய்ப்பு வழங்குதல் மற்றும் சீரமைப்பு மூலம் ஊராட்சி சொத்துக்களை மேம்படுத்துவது. இந்திய அளவில் இத்திட்டம் முழுமை பெறவில்லை. இத்திட்டப்படி நாள் ஒன்றுக்கு, நபர் ஒருவருக்கு ரூ.119 சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், அவரவர் செய்யும் வேலையின் அளவுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. இதன்படி, 60 வயது முதியவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.30 மட்டுமே சம்பளம் கிடைக்கும். இத்திட்டத்திற்கு இதுவரை 32 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை செலவு செய்தும் திட்டம் தோல்வியடைந்துள்ளது.இத்திட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். கண்மாய், குளம், வரத்து வாய்க்கால்களை தூர்வார மனித உழைப்புடன், ஆழமான பகுதிகளை தூர்வார இயந்திரத்தையும் பயன்படுத்தி மேம்பாடு காண வேண்டும். ஆந்திரா, கர்நாடகா, பீகார் மாநிலங்களில் தானம் அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டப்பட்டு கண்மாய்கள் முறையாக தூர்வாரப்படுகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக 750 கண்மாய்களில் சீரமைப்பு பணி நடக்கிறது என்றார்.திட்ட அலுவலர்கள் வெங்கடசாமி, களப்பணி அலுவலர்கள் குருநாதன், சிங்கராஜன், கடமலைக்குண்டு ஊராட்சி தலைவர் பரமேஸ்வரன், சந்தையூர் ஊராட்சி தலைவர் ஜோதி, தொடர்பு அலவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ