உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இயக்க பயிற்சி வகுப்பு

இயக்க பயிற்சி வகுப்பு

மதுரை : கிராமப்புற இளைஞர், பெண்களுக்கு நவீன விவசாய இயந்திரங்களை இயக்க, விவசாயபொறியியல் துறைசார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே அரசு இயந்திர கலப்பை பணிமனை வளாகத்தில் இப்பயிற்சி நடக்கும். செப்., 23 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 22 வரை பயிற்சி நடக்கும். ஆறுமாதம் தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடக்கும்.பயிற்சியாளர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மதிய உணவு, தினப்படி வழங்கப்படும். விருப்பமுள்ளோர், 'உதவி செயற்பொறியாளர், அரசு இயந்திர கலப்பை பணிமனை, மதுரை-104,' என்ற முகவரியில் நேரில் அல்லது, 0452- 242 2953ல் போனில் தொடர்பு கொள்ளலாம், என செயற் பொறியாளர் ஆரோக்கியசாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ