உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உலக நன்மைக்காக சண்டிஹோம யாகம்

உலக நன்மைக்காக சண்டிஹோம யாகம்

நாச்சிக்குளம் : சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி வெக்காளி பராசக்தியம்மன் சித்தர்பீடம் கோயிலில் உலக நன்மைக்காக சண்டிஹோம யாக பூஜை நடந்தது. குருயோகி மனோகர் சுவாமிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் 500 பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து புனிதநீர் குடங்களை சுமந்து, நாச்சிக்குளம் காளியம்மன் கோயில் வந்து வழிபாடு செய்து, பின் வெக்காளி பராசக்தி கோயிலுக்கு வந்தனர். அங்கு அம்மனுக்கு புனிதநீர் அபிஷேகம் நடந்தது. மாலை யாகசாலையில் அம்மனின் விக்கிரகத்திற்கு அஷ்டப்பந்தன பூஜை நடந்தது. நேற்று காலை 9 அடி ஆழமுள்ள யாகசாலையில் பக்தர்கள் வழங்கிய பல்வேறு பொருட்களால் யாக பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ