| ADDED : செப் 19, 2011 12:59 AM
மதுரை : வாழையில் அதிக மகசூல் பெற வழிகள் இருப்பதாக உதவி இயக்குனர் கனகராஜ் தெரிவித்துள்ளார். மதுரை கிழக்கு யூனியனில் வாழை சாகுபடி நடந்து வருகிறது. தற்போது பெறப்படும் வாழைத் தார்கள் 20 முதல் 25 கிலோ உள்ளன. இதை 35 முதல் 45 கிலோ அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு திசுவாழைக் கன்றுகள் ஜி9, செவ்வாழை, ரஸ்தாளி, பூவன் ரகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்முறையில் கட்டைகளுக்கு மாற்றாக வாழை திசுக்களில் இருந்து உற்பத்தி செய்த கன்றுகள் நடவுக்கு பயன்படுத்தப்படும். திசுவாழை நடுவதால் தரமான, நோய் இல்லாத வாழை நடவாகிறது. சீரான, வீரியமான வளர்ச்சி கிடைக்கும். ஒரே நேரத்தில் தார்களை வெட்டலாம். இரட்டிப்பு மகசூல் கிடைப்பதால், வருமானமும் இரட்டிப்பாகும். திசுவாழை நடவுக்கு தோட்டக்கலை துறை மூலம் ஏக்கருக்கு ரூ. 12 ஆயிரத்து 480 வரை மானியம் வழங்கப்படும். திசுவாழை நடவு செய்யும்போது சொட்டுநீர் பாசனம் அவசியம். வாழை விவசாயிகள் இதுகுறித்த விபரங்களுக்கு கிழக்கு யூனியனில் செப்., 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு முடிந்ததும் திசுவாழைக் கன்றுகள் உற்பத்தி செய்யும் நிறுவன ஆலோசனை கூட்டத்தில் தொழில்நுட்பங்கள் எடுத்துரைக்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் 98652-80167ல் தொடர்பு கொள்ளலாம், என உதவி இயக்குனர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.