மதுரை ரிங்ரோடு சுங்கச் சாவடி கட்டணம் ஏப்.1 முதல் உயர்வு
மதுரை: உத்தங்குடி முதல் கப்பலுார் வரையான 27 கி.மீ., ரிங்ரோட்டில் வண்டியூர், சிந்தாமணி, அருப்புக்கோட்டை சந்திப்பு அருகே சுங்கச்சாவடி உள்ளது. இந்த ரிங்ரோட்டை தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் நிர்வகித்து வருகிறது. இந்த ரோடு மற்றும் சுங்கச்சாவடிகள் மூன்றையும் தனியார் நிறுவனம் பராமரிக்கிறது.இந்தச் சுங்கச் சாவடிகளில் வரும் ஏப்.1 முதல் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ''2008 மத்திய அரசு அறிவித்தபடி அடிப்படையில் ஒரு கி.மீ.,க்கு 65 காசு வீதமே வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அதில் 3 சதவீதம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் அளவுக்கு அதிகரித்து வசூலிக்கப்படுகிறது. இதன்படி குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. ஓராண்டுக்கு இக்கட்டண உயர்வு இருக்கும்'' என்றார்.