உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய தடகளத்தில் மதுரை மாணவர்

தேசிய தடகளத்தில் மதுரை மாணவர்

மதுரை: சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான தடகளப்போட்டிகள் கோவையில் நடந்தன.19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மதுரை கேந்திரிய வித்யாலயா (நரிமேடு) பள்ளி மாணவர் ஹர்ஷா மாறன் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 3ம் இடம், 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2ம் இடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். மதுரை மாவட்ட தடகள சங்க செயலாளர் உஸ்மான் அலி, பயிற்சியாளர் சிங்கராஜ், பள்ளி முதல்வர் மனோஜ்குமார் பாலிவால், உடற்கல்வி ஆசிரியர் மலைச்சாமி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி