மேலும் செய்திகள்
மாநில நீச்சல் போட்டி நெல்லை வீரர் சாதனை
07-Jun-2025
மதுரை: இந்திய நீச்சல் சங்கம் சார்பில் தேசிய சீனியர் நீச்சல் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது.இதில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்ற மதுரை லீ சாட்லியர் பள்ளி மாணவி ரோஷினி 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜூனியர் பிரிவை சேர்ந்த ரோஷினி சீனியர் பிரிவில் பங்கேற்று பதக்கம் வென்றார். இவரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, நீச்சல் சங்க துணைத்தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், இணைச் செயலாளர் கண்ணன், துணைச்செயலாளர் இளமுருகன், செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன் பாராட்டினர்.
07-Jun-2025